Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Maragadachaleswarar temple, Eengoimalai,Tiruchi

அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர் திருக்கோவில், திருஈங்கோய்மலை


Arulmigu Sri Sri Maragadachaleswarar temple, Eengoimalai,Tiruchi!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர  

இறைவி :அருள்மிகு மரகதாம்பிகை,மரகதவல்லி,லலிதா அம்மன்

தல மரம் :புளியமரம்

தீர்த்தம் :

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர் திருக்கோவில், திருஈங்கோய்மலை தல வரலாறு.

மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்

ஸ்தல வரலாறு :

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். முன்பொரு சமயம் ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம் ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம்,மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திருஈங்கோய்மலை என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே. வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்..



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு மரகதாசலேசுவரர் திருக்கோயில்
திருஈங்கோய்மலை
திருவிங்க நாதமலை
வழி மணமேடு
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621209.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

திருச்சிக்கு - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.